FARM TO GATE இணைய செயலியை,  கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 22.03.2024 அன்று அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின்  வழிகாட்டுதல்களுக்கு அமைய வடிவமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் ஒட்டகப்புலம் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வின் போது இந்த இணைய செயலி மக்கள் மயப்படுத்தப்பட்டது. இவ் இணைய செயலியை பயன்படுத்த www.farmtogate.org எனும் முகவரிக்குள் உள்நுழையலாம்.

  

வடக்குமாகாண 34 உள்ளுராட்சி மன்றங்களுக்குமான இணையத்தளங்களினை வெளியிடும் நிகழ்வு -01.03.2024

வடக்குமாகாண 34 உள்ளுராட்சி மன்றங்களுக்குமான இணையத்தளங்களினை கௌரவ ஆளுநர் அவர்களினால் வைபவரீதியாக வெளியிடும் நிகழ்வானது 01.03.2024ஆந் திகதியன்று பிரதம செயலாளர் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கௌரவ ஆளுநர், வடமாகாண பிரதம செயலாளர், உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர், UNDP-CDLG திட்ட முகாமையாளர், மாகாண இறைவரி ஆணையாளர், உள்ளுராட்சி ஆணையாளர், பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர்கள், சபையின் செயலாளர்கள், இணையத்தள வடிவமைப்பில் ஈடுபட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் உள்ளுராட்சி திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
UNDP-CDLG திட்டத்தின்கீழ் மேற்படி இணையத்தளங்கள் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
ஒவ்வொரு சபைகளுக்குரிய இணையத்தளங்களினை அந்தந்த சபைக்குரிய உத்தியோகத்தரினால் வடிவமைக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.
இணையத்தளத்தினை வடிவமைப்புச் செய்த உத்தியோகத்தர்களுக்கு இந்நிழ்வில் மெச்சுரை வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
பருத்தித்துறை நகரசபைக்குரிய இணையத்தள முகவரி: pointpedro.uc.gov.lk