பொதுமக்கள் தங்களுடைய முறைப்பாடுகளை எமது அலுவலக முகவரி மற்றும் தபால்முகவரியின் ஊடாக அனுப்பிவைக்க முடியும்
அலுவலக முகவரி: கல்லூரி வீதி, பருத்தித்துறை இமெயில்: secretary ucppd@gmail.com
உள்ளுராட்சி அதிகாரப் பகுதியில் உள்ள மக்களின் நலனுக்காக சாதாரண தொகையை விட அதிகமாக குடிநீர் தேவைகள் இருக்கின்ற போதும் அல்லது பிற விசேட நோக்கங்களுக்காக தண்ணீர் தேவைப்படும் போதும், பவுசர் மூலம் தேவையான அளவு தண்ணீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதனை ஒரு பொதுப் பயன்பாட்டுச் சேவையாகக் கருதி நீரை வழங்குவதற்கும், கட்டணம் வசூலிப்பதற்கும் உள்ளுராட்சி மன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது.
உள்ளுராட்சி மன்றங்கள் தமது அதிகார எல்லையினுள் மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்குமான பொது நிர்வாக அதிகாரத்தைக் கொண்டதாகும். அதிகார எல்லையினுள் கழிப்பறைகளில் காணப்படும் மலக் கழிவுகளை அகற்றுவது இப் பணிகளின் ஒரு அம்சமாக அமைவதுடன் அது மக்களுக்குக்கான சுகாதார வசதியையும் மேம்படுத்தி உறுதிப்படுத்துகின்றது.
வீடுகள், கட்டிடங்கள், நிலம், குடியிருப்புகள் மற்றும் குத்தகைக்கு விடப்பட்ட அரச சொத்துக்கள்; உட்பட உள்ளுராட்சி அதிகார வரம்பிற்குள் உள்ள அனைத்து அசையாச் சொத்துக்களும் ஆதன வரிக்கு உட்பட்டவை. ஆதனத்தின் வருடாந்த பெறுமதியின் அடிப்படையில் அமைச்சர் (உள்ளுராட்சி விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர்: தற்போது மாகாண சபை அமைச்சர்) நிர்ணயிக்கும் சதவீதத்தின் அடிப்படையில் வரி கணக்கிடப்படுகிறது. அனைத்து அசையாச் சொத்துக்களும் முன்கூட்டிய சபையின் ஆதனப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும். மாநகர சபை எல்லைக்குள் உள்ள அனைத்து கட்டிடங்களும் மாநகர சபை ஆதனப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும் மற்றும் அத்தகைய கட்டடங்கள் மற்றும் நிலத்தின் வருடாந்த மதிப்பின் அடிப்படையில் மதிப்பீட்டு வரி கணக்கிடப்படுகிறது.