வடக்குமாகாண 34 உள்ளுராட்சி மன்றங்களுக்குமான இணையத்தளங்களினை கௌரவ ஆளுநர் அவர்களினால் வைபவரீதியாக வெளியிடும் நிகழ்வானது 01.03.2024ஆந் திகதியன்று பிரதம செயலாளர் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கௌரவ ஆளுநர், வடமாகாண பிரதம செயலாளர், உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர், UNDP-CDLG திட்ட முகாமையாளர், மாகாண இறைவரி ஆணையாளர், உள்ளுராட்சி ஆணையாளர், பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர்கள், சபையின் செயலாளர்கள், இணையத்தள வடிவமைப்பில் ஈடுபட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் உள்ளுராட்சி திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
–UNDP-CDLG திட்டத்தின்கீழ் மேற்படி இணையத்தளங்கள் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
–ஒவ்வொரு சபைகளுக்குரிய இணையத்தளங்களினை அந்தந்த சபைக்குரிய உத்தியோகத்தரினால் வடிவமைக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.
–இணையத்தளத்தினை வடிவமைப்புச் செய்த உத்தியோகத்தர்களுக்கு இந்நிழ்வில் மெச்சுரை வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
–பருத்தித்துறை நகரசபைக்குரிய இணையத்தள முகவரி: pointpedro.uc.gov.lk