உக்காத திண்மக் கழிவுப் பொருட்கள் விற்பனை செய்வதற்காக கூறுவிலைகோரல்

* உக்காத திண்மக் கழிவுப் பொருட்களாகிய பொலீத்தீன், காட்போட், பிளாஸ்ரிக் போத்தல்கள், ஏனைய பிளாஸ்ரிக் வகைகள், தகரப் பேணிகள், வெள்ளை மற்றும் நிற கண்ணாடிப் போத்தல்கள், பத்திரிகைகள் ஆகியவற்றினை விற்பனை செய்வதற்காக கூறுவிலைகள் பருத்தித்துறை நகரசபையினால் கோரப்பட்டுள்ளன.
* கூறுவிலைகள் சமர்ப்பிக்க விரும்புவோர் அதற்கான விண்ணப்ப படிவத்தினை பருத்தித்துறை நகரசபை அலுவலகத்தில் 22.02.2024 ம் திகதி பி.ப 3.00 மணி வரை பெற்றுக்கொள்ள முடியும்.
* கூறுவிலைகளை செயலாளர், நகரசபை, பருத்தித்துறை எனும் முகவரிக்கு 26.02.2024ம் திகதி பி.ப 3.00 மணிக்கு முன்னர் கிடைக்கக்கூடியவாறு பதிவுத்தபால் ஊடாகவோ நேரடியாகவோ சமர்ப்பிக்க முடியும்.
* இதற்கான பத்திரிகை விளம்பரமானது 10.02.2024ம் திகதிய தினக்குரல் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுளளது.