வடமாகாண உள்ளுராட்சி மன்றங்களில் முதன்முறையாக அதாவது பருத்தித்துறை நகரசபையில் இன்றையதினம் 22.02.2024 online payment முறை மூலம் சபைக்குரிய ஆதனவரி செலுத்தும் திட்டமானது வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.செ.பிரணவநாதன், வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் மற்றும் சிறப்பவிருந்தினர்களாக திரு.பொ.சிறீவர்ணன், உதவி உள்ளுராட்சி ஆணையாளர், யாழ்ப்பாணம், திரு.சர்வானந்தா- CDLG-UNDP திட்டம், திரு.அத்தப்பத்து- வயம்ப அபிவிருத்தி நிறுவனம், திரு.ரத்னராஜ்- முகாமையாளர், பருத்தித்துறை இலங்கை வங்கி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். பிரதம, சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் சபையின் செயலாளர் திருமதி.தாரணி கஜரூபன் அவர்களினால் online payment system அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இன்றிலிருந்து எமது சபைக்குரிய வரிகளினை www.pointpedro.uc.gov.lk எனும் இணையத்தளத்தினுள் online payment எனும் பகுதியினூடாகவே அல்லது pay.cat2020.lk எனும் முகவரியினூடாகவோ செலுத்த முடியும்.