பருத்தித்துறை நகரசபையினால் சமூகத்துடன் இணைந்து மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் பருத்துத்துறை பொதுநூலகத்தினரால் e-Learnng Unit எனும் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

  
💻 பருத்தித்துறை நகரசபையினால் சமூகத்துடன் இணைந்து மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் பருத்துத்துறை பொதுநூலகத்தினரால் e-Learnng Unit எனும் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
💻இச் செயற்றிட்டத்தின் தொடர்ச்சியாக எதிர்வரும் காலங்களில் பொதுநூலகத்தினரால் சிறுவர்கள் சுயமாகவே கணனி விளையாட்டுக்களை உருவாக்கும் பயிற்சிநெறி (8-12 வயது சிறுவர்களுக்கானது) ஆரம்பிக்கப்படவுள்ளது.
💻 மேற்படி கற்கைநெறியானது சிறுவர்கள் சுயமாக சிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்த வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.
💻  இதன் முதற்கட்டமாக முன்பள்ளி சிறார்களுக்கான Fundermantel of IT for kids எனும் கற்கைநெறியானது 10,13/05/2024 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது.இக்கற்கை நெறியில் 05 வயதுப்பிரிவு ஆத்தியடி சைவமன்ற முன்பள்ளி சிறார்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
💻 இம் முன்பள்ளிச்சிறார்கள் கலந்து கொண்டமைக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.