2023ஆம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு சதாவதானி கதிரவேற்பிள்ளை சனசமூகநிலையத்தினருடன் இணைந்து பருத்தித்துறை நகரசபையின் பொதுநூலகத்தினால் புத்தகக்கண்காட்சி 25.10.2023ஆந் திகதி நடாத்தப்பட்டது. இப் புத்தகக்கண்காட்சியினை நகரசபையின் கணக்காளர் திருமதி.ச.நிரூபா அவர்களினால் வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சனசமூகநிலைய பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.