வியாபார நிலையங்களுக்கான உரிமம் வழங்குதல்

வியாபார உரிமம்

உள்ளுராட்சிமன்றத்தின் எல்லைக்குள் வசிக்கின்ற மக்களது சுகாதாரம், வசதி, நலனோம்பல் மற்றும் எல்லா வசதிகளையும் பாதுகாப்பதற்கான விடயங்களை முறைப்படுத்தல், கட்டுப்படுத்தல் மற்றும் நிருவாகம் ஆகியவை உள்ளுராட்சிமன்றங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பிரதான கடமைப்பொறுப்புகளாகும். உள்ளுராட்சிமன்றங்களின் எல்லைக்குள் நடைபெறுகின்ற வணிகம் அல்லது வியாபாரங்களுக்கிடையில் பொது மக்களின் சுகாதாரம்ள, வசதி மற்றும் நலனோம்பல் என்பவற்றுக்கு ஏற்புடையதாக உள்ளுராட்சிமன்றங்களின் சட்டங்களின் கீழ், அல்லது உள்ளுராட்சிமன்றங்களினால் உருவாக்கப்பட்ட உபவிதிகளின்  ஏற்பாடுகளுக்கமைவாக குறித்த வணிகம் அல்லது வியாபாரம் சார்ந்து குறித்த உள்ளுராட்சிமன்றத்தின் உரிமம் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும். இந்த பணியினை ஒழுங்குபடுத்தல் குறித்த உள்ளுராட்சிமன்றத்தின்பொறுப்பு ஆகும்.

head
13

சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமம் என்பது 1980 இன் 47 இலக்க தேசிய சுற்றுச்சூழல் சட்ட விதிகளின் கீழ் ஒரு ஒழுங்குமுறைசட்ட கருவியாகும். தேசிய சுற்றாடல் அதிகாரசபையின்  இன் பிரிவு 23A, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமத்தினை பெற்றுக்கொள்ளாத, எந்தவொரு நபரும் பரிந்துரைக்கப்பட்ட செயற்பாடுகளை தவிர்ந்த எந்தவொரு செயற்பாடுகளையூம் செயற்படுத்தல்கூடாது என்று கூறுகிறது. அதாவது கழிவுகளை வெளியேற்றுவதற்கு, கழிவுகளை சேமித்து வைத்தல், புகை, வாயுக்கள், புகை, நீராவி அல்லது அதிகப்படியான சத்தம் / அதிர்வுகளை சுற்றுச்சூழலில் வெளியிடுவது போன்ற செயற்பாடுகளை செய்வதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அவசியமாகும். 

head
10

பொது நிகழ்ச்சிகள், திருவிழாக்களுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கல்

எந்தவொரு பொது இடத்திலும் நாடாத்தப்படுகின்ற கலை நிகழ்சிகள் அல்லது திருவிழாவை காணவரும் பொதுமக்களின் உடல்நலம் சுகாதாரம் வசதி மற்றும் பொது மக்களின் பாதுகாப்பிற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதிசெய்த பிறகு, அத்தகைய கலை நிகழ்ச்சிகள் அல்லது திருவிழாவை நடத்த உள்ளுர் அதிகார சபை வழங்கிய சான்றிதழானது ‘அனுமதிப் பத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது.